சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் தங்க நகை வியாபாரம் செய்துவருகிறார்.
நகை கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை அவர்களின் விருப்பத்துக் கேற்ப கோவையில் தயார் செய்து, அவற்றை காஞ்சிபுரத்தில் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்தில் இருந்து புதிய டிசைன்களில் செய்யப்பட்ட தங்கநகை 420 கிராம், ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கத்துடன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர் ராஜேஷ்குமாரின் வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளி விட்டனர்.
» பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி
» பெங்களூரு ரயில் நிலையங்களில் 3-வது முறையாக இளம்பெண் சடலம் - ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை
பின்னர் அவர் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். கீழே விழுந்ததில் காயமடைந்த ராஜேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago