நாமக்கல்: குடும்ப பிரச்சினை காரணமாக இரு குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மோகனூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் புதுத் தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித் (2) என இரு குழந்தைகளும் இருந்தனர்.
குணவதிக்கும் அவரது தந்தை கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணவதி தனது இரு குழந்தைகளையும் வீட்டருகே உள்ள கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார். பின், தானும் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மோகனூர் போலீசார் மூவரது பிரேதங்களையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் இறந்த சோகத்தில் தந்தை கேசவன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோகனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
» கரூர் | வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 3 ஆண்டுகள் சிறை
» இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக் குத்து: கிருஷ்ணகிரியில் இளைஞர் கைது
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago