கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நகைக் கடை ஒன்றில் முன்னர் வேலை செய்தபோது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆனங்கநல்லூரை சேர்ந்த விவேக் ஆனந்த் (29) என்பவருடன் பழகி காதலித்து வந்தார். விவேக் ஆனந்த், கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2-வது பகுதி கண்ணப்பன் நகரில் தங்கி போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தார்.
இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு சித்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், விவேக் ஆனந்த் உடனான காதலை துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விவேக் ஆனந்த், இது குறித்து கேட்டதுடன், இளம்பெண்ணை கண்டித்துள்ளார். இருப்பினும் இளம்பெண் அதனை பொருட்படுத்தாமல் சித்திக்குடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் ஆனந்த், இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வலதுபுற கழுத்திலும், முகத்திலும் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விவேக் ஆனந்த்தை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago