தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது, சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி (30) என்பவர் மாரிமுத்துவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கிணற்றின் அருகே சென்ற போது செந்தூரப்பாண்டி, மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த வெள்ளத்துரை (43) மற்றும் அவரது நண்பர்களான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (25), முத்துசாமி ஆகியோர் சேர்ந்து மாரிமுத்துவை புளிய மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
மாரிமுத்து அதே பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதை கண்டித்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த மாரிமுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின்பேரில் பனவடலிசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தூர்பாண்டியன், வெள்ளத்துரையை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமார், முத்துசாமியை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago