சென்னை | லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). கூலி தொவிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்தார்.

அந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக மாநகராட்சி லாரியில் மணல் கொண்டு வந்தனர். மணலைக் கொட்டிவிட்டு லாரியை பின்னோக்கி இயக்கும்போது, எதிர்பாராதவிதமாக நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷ் மீது லாரி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் கொருக்குப்பேட்டை சுகுமாரை (36) போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்