சேலம் | கடன் தொல்லையால் பட்டறை உரிமையாளர் தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சூரமங்கலம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் தங்கராஜ் (65). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு கோபி, பாபு என்ற மகன்களும், சபிதா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 8-ம் தேதி வீட்டுக்கு வந்த தங்கராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக மனைவியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் தங்கராஜை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தங்கராஜ் உடலை தனி அறையில் வைத்துவிட்டு மறுநாள் (நேற்று) அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளது. சோகத்தில் இருந்த விஜயா இரவு நேரத்தில் கணவர் இறந்த அறைக்கு சென்று புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் தங்கராஜ், விஜயா உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கடன் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொழிலுக்காக ரெட்டியூரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் தங்கராஜ் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடந்த இரண்டு மாதமாக வட்டி தொகை கட்டாமல் இருந்ததால் தங்கராஜை, ராஜா மிரட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தற்கொலை செய்துள்ளார்.

அவர் இறந்த சோகத்தில் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8-ம் தேதி வீட்டுக்கு வந்த தங்கராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக மனைவியிடம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்