திருவாரூர் அருகே ஜாமீனில் வந்த ரவுடி கொலை

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(34). வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் உட்பட 5 பேர் நேற்று திருவாரூர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான பின், வழக்கறிஞரை இறக்கிவிடுவதற்காக 5 பேரும் காரில் கமலாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு காரில் வந்தவர்கள், ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்ற கார் மீது மோதினர். அதன்பின், காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ராஜ்குமாரை நோக்கி வந்தது.

இதையடுத்து ராஜ்குமார் காரில் இருந்து இறங்கி ஓடும்போது, அவரை துரத்திச் சென்ற கும்பல், கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

ராஜ்குமார்

தகவலறிந்த திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து திருவாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு, நீடாமங்கலம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்