புதுச்சேரி | கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மனைவி பிரியங்கா(28). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பிரியங்காவுக்கு 20 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் சீர்வரிசை பொருட்கள், மாப்பிள்ளைக்கு 5 பவுன் கொடுத்துள்ளனர். மேலும் தவணை முறையில் காரும் வாங்கி கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரியங்காவிடம், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் பிரியங்கா நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் அவரது கணவர் ரவிசங்கர், மாமனார் பார்த்தசாரதி, மாமியார் ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் ரமேஷ், ராஜசேகர், பாரதி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்