புதுச்சேரி | காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து இருளர் 7 பேர் மீது பொய் வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தலைவர் சிவகாமி, வக்கீல்கள் பூபால், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அந்தோணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மாநிலச் செயலாளர் அமுதவன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன் உட்பட பல்வேறு சமூக அமைப்புத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மீன்பிடிக்க சென்ற பழங்குடி இருளர் மீது காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு தொடரப்பட்டதை கண்டித்தும், இதுதொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக்கோரியும் வரும் 13-ம் தேதி புதுவையிலும், 20-ம் தேதி விழுப்புரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.

சுகுமாரன் கூறுகையில், "காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் அருகில் கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவு மீன் பிடிக்கச் சென்ற பழங்குடி இருளர் இருவர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் குமாரப்பாளையம் அருகிலுள்ள ஆறுபுளியமரம் செங்கல் சூளையில் இருந்த பழங்குடி இருளர்கள் உட்பட 7 பேரை போலீஸார் பிடித்துச் சென்றனர்.

இவர்களை கடந்த மாதம் 28-ம் தேதி வரை காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து, பச்சை மிளகாய் சாறை பிழிந்து கண்களில் விட்டும், முகத்தில் தேய்த்தும் சித்ரவதைச் செய்துள்ளனர். அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

இதில் இருவர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள். இதனால் நீதிபதி, போலீஸாரைக் கடுமையாக எச்சரித்து இருவரையும் நீதி மன்ற காவலில் சிறைக்கு அனுப்ப வில்லை. பின்னர், இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஓர் உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து, மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அறிக்கை அளிப்போம். உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் புதுச்சேரி காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வில்லை. புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் காவல்நிலை யங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்