ராமநாதபுரம்: பட்டாவுக்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு, ராமநாதபுரம் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
சாயல்குடி அருகே வாலிநோக்கத்தைச் சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவர் கடந்த 2005-ல் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு பரிந்துரை செய்ய, அப்போது வாலிநோக்கம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த அப்பாஸ் மந்திரி ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பின்னர் ரூ.500 தரும்படி கேட்டுள்ளார்.
இதுகுறித்து காதர் மொய்தீன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அப்பாஸ் மந்திரியை கைது செய்தனர். அதையடுத்து, அவர் வருவாய்த்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பணி ஓய்வுபெற முடியாதவாறு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அப்பாஸ் மந்திரிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.கவிதா உத்தரவிட்டார்.
» இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரம்: நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சியினர் 8 பேர் கைது
» சாலைகளை மாநகராட்சி சீரமைக்காதது ஏன்? - பாஜக மாநில துணைத் தலைவர் கேள்வி
லஞ்ச புகார்களை தெரிவிக்கலாம்: ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம். லஞ்சம் கேட்டால், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும். அதேபோல் அரசு அலுவலர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தெரிய வந்தாலும் தகவல் தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக எண்- 04567-230036 மற்றும் டிஎஸ்பியின் செல்போன் எண்- 94986 52169, ஆய்வாளர்-1- 94986 52166, ஆய்வாளர்-2- 94986 52167 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் 20 ஊராட்சி அலுவலகங்கள், 71 கிராம நிர்வாக அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை, இ-சேவை மையம் ஆகிய 192 இடங்களில் லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago