கரூர் | வீட்டு வரி நிர்ணயத்திற்கு லஞ்சம் - மாநகராட்சி வருவாய் உதவியாளர், உடந்தையாக இருந்த டீக்கடைகாரர் கைது

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் வீட்டு வரி நிர்ணயத்திற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த டீக்கடைகாரர் இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாநகராட்சி வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் (54). இவர் கரூர் மாநகராட்சி 14வது வார்டு தெற்குகாந்தி கிராமம் பகுதியில் புதிதாக வீடு கட்டிவரும் மாணிக்கவாசகத்தின் வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.20,000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத மாணிக்கவாசகம் இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

காந்திகிராமத்தில் உள்ள டீக்கடை உரிமையாளர் பாலாஜியிடம் ரூ.20,000 வழங்க ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலாஜியிடம் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாயை மாணிக்கவாசகம் இன்று (மார்ச் 7ம் தேதி) கொடுத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ரவிச்சந்திரன் பணத்தை பெறும்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி நடராஜன், இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் ரவிச்சந்திரன் மற்றும் உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

55 mins ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்