தஞ்சாவூர்: ஆந்திராவிலிருந்து தஞ்சாவூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 285 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தஞ்சாவூர் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் அடைக்கல எப்.ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமை காவலர் பி.உமாசங்கர், காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தஞ்சாவூர் புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ஹல்க் கார்த்தி(33), தென்காசியைச் சேர்ந்த ரகுநாதன்(27) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புடைய 285 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
» ‘எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ பட்டப்படிப்பு - ஆன்லைனில் சென்னை ஐஐடி வழங்குகிறது
» அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு டிஐஜி ஜெயச்சந்திரன், எஸ்.பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago