நாமக்கல்: பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட என். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டி. முருகேசன். இவர் ஜேசிபி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தை தங்கராஜ் பெயரில் உள்ள பட்டாவை பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு என். புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் எஸ். குமரவேல் (51) ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்காக முருகேசனிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இத்தொகையை வழங்க மனமில்லாத முருகேசன், இதுதொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுதல்படி நேற்று காலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற முருகேசன் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமரவேலிடம் ரசாயணம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
அதை அவர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து லஞ்சப் பணம் ரூ. 3 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago