கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய தொலை தொடர்பு நிறுவனத்தில் உரையாடல் பதிவான டேப்பை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளை போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக முதலில் நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்.பி தலைமையில், கூடுதல் எஸ்.பி, டிஎஸ்பி-க்கள் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவ்வழக்கு தொடர்பான புலன் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.
முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் உள்ளிட்டோருக்கு சிபிசிஐடி போலீஸார் தொடர்ச்சியாக சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது, அங்கு நடந்த செல்போன் உரையாடல்களை அப்போது விசாரித்த தனிப்படை போலீஸார் முழுமையாக சேகரிக்க வில்லை என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து, செல்போன் உரையாடல் விவரங்களை பெறுவதற்காக சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையிலான போலீஸார் சில தினங்களுக்கு முன்னர் திருச்சி சென்றனர். அங்குள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மண்டல தலைமை அலுவலகத்தில் விசாரித்தனர். பின்னர், செல்போன் உரையாடல்கள் தொடர்பான டேப் பதிவுகளை பெற்று, ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சம்பவம் நடந்த போது யாரிடம் செல்போனில் பேசினர், சந்தேகத்துக்குரிய நபர்கள் அந்த சமயத்தில் யாரிடம் எல்லாம் செல்போனில் பேசியுள்ளனர் என்பது போன்ற தகவல்களை சேகரிப்பதற்காக டேப்பை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
க்ரைம்
47 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago