சென்னை | கால்நடை பண்ணை தொழிலில் முதலீடு; அதிக லாபம் தருவதாக ரூ.4.81 கோடி மோசடி: தந்தை, மகன் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கால்நடை பண்ணை தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.4.81 கோடி மோசடிசெய்ததாக தந்தை, மகனைசென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர், விவேக் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (67). இவரது மகன் மகேஷ் குமார் (40). இவர்கள் உட்பட மேலும் சிலர் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பால் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இவர்கள் தங்களது பால்பண்ணை நிறுவனத்தில் முதலீடுசெய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

மேலும், குஜராத்தில் இருந்து அதிக அளவில் பால் தரும் கறவை மாடுகளை வாங்கி தருவதாகவும் கூறி முதலீடு வசூல் செய்து பண மோசடியில் ஈடுபட்டனர். அந்த வகையில் ரூ.4 கோடியே 81 லட்சத்து 94,168 மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சுந்தரராஜன், அவரது மகன் மகேஷ் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை அமைத்து போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்