காரைக்குடி | கொள்ளை வழக்கில் கைதான தாய் தற்கொலை - கொள்ளைக்கு கூட்டு சேர்த்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

காரைக்குடி: கொள்ளை வழக்கில் கைதான தாய் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே கண்டனூரைச் சேர்ந்த ராமு மனைவி பாக்கிய லெட்சுமி (42). இவர் நேற்று முன் தினம் இரவு தனது மகள் ரம்யாவுடன் (15) மாத்தூர் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர்களை வழி மறித்து பழையூரைச் சேர்ந்த அசோக் குமார் (22) பாக்கிய லட்சுமியை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற ரம்யாவையும் குத்தினார்.

காயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் குத்திய அசோக் குமாரை சாக்கோட்டை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கண்டனூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் வீட்டில் பாக்கிய லட்சுமி குடியிருந்தார்.

2021-ம் ஆண்டு பாக்கியலட்சுமி, தனது கணவர் ராமு, தோழி மஞ்சுளா, தோழியின் மகன் அசோக்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் முக மூடி அணிந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தார். இதில் சில நாட்களிலேயே கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த மஞ்சுளா கடந்த ஆண்டு கைதான அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். பணத்தாசை காட்டி தன்னையும், தனது தாயாரையும் கொள்ளையில் கூட்டுச் சேர்த்த பாக்கிய லட்சுமியால் தான் தனது தாயார் இறந்தார் என அசோக் குமார் கருதினார். இதனால், மஞ்சுளாவின் முதலாமாண்டு நினைவு நாளில் பாக்கியலட்சுமியை அசோக்குமார் கத்தியால் குத்தியது தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

க்ரைம்

14 mins ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்