சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.35.38 லட்சம் மதிப்பிலான 705 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் திங்கள்கிழமை (பிப்.27) துபாயிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து ரூ.35.38 லட்சம் மதிப்புள்ள 705 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்