அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (52). இவர், அதே பகுதியில் உள்ள பண்ணை வீட்டின் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா(45). தம்பதியரின் மகன் அசோக்குமார் (24). இவரது பாட்டி வள்ளியம்மாளும் (80) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். யசோதாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அசோக்குமார் ஐடிஐ முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், அவருக்கும் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதித்ததாகவும் இதனால், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பழனி நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். தாய், மகன், பாட்டி ஆகிய 3 பேரும் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதில், நள்ளிரவில் உறக்கத்தில் இருந்து விழித்த அசோக்குமார், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கொண்டு வந்து, தனது தாய் மற்றும் பாட்டியின் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். பின்னர், தானும் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வள்ளியம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாய் மற்றும் மகன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அசோக்குமார் நேற்று உயிரிழந்தார். யசோதா சிகிச்சை பெற்று வருகிறார். பாணாவரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 mins ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago