கும்பகோணம்: அய்யம்பேட்டை காவல் நிலைய திருட்டு வழக்குகள் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு தலைமறைவாக இருந்த கொள்ளையர் ஒருவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாயக்கர்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, நாயக்கர்பட்டி, தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் அறிவழகன் (என்கிற) அரவெட்டு அறிவழகன் (30). இவரை மீது கடந்த 2011-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அறிவழகன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான அறிவழகனை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.
இதனால், போலீஸாரால் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் அறிவழகனை ஆஜர்ப்படுத்த முடியாமல் இருந்தது. இந்த நிலையில், அறிவழகன் நாயக்கர்பட்டியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு இன்று தகவல் வந்ததது.
இதனைத் தொடர்ந்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார், அங்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த அறிவழகனை பிடித்து கைது செய்து நாயக்கர்பட்டியில் உள்ள சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago