முகமூடி அணிந்து சுவரில் ஏறிச் செல்லும் கொள்ளையன்: பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவிகாட்சிகள் வெளியாகி உள்ளன. சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் ஜே.எல்.கோல்ட்பேலஸ் என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையின் ஷட்டரை கடந்த 9-ம் தேதி நள்ளிரவு காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைக்கடையிலிருந்த 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புடைய வைர நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பினர்.

இதுகுறித்து திருவிக நகர்போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க ஓர் இணை ஆணையர், 2 துணை ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் வெளி மாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் சிலரை போலீஸார் வெளி மாநிலம்சென்று பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களுக்கும் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லைஎனத் தெரியவந்தது. கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது சிசிடிவி பதிவுகளையும் எடுத்துச் சென்றுவிட்டதால் அதன் மூலம் உண்மையான கொள்ளையர்களை அடையாளம் காண முடியவில்லை.

இதையடுத்து நகைக்கடை அருகேயும், சுற்றியுள்ள பகுதிகளிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் திருட்டு வாகனத்தில் போலி வாகன எண்ணுடன் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீஸார் துப்புதுலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், முகமூடி அணிந்த கொள்ளையன் சுவர் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும்,கொள்ளையர்கள் வந்த கார் 10-ம்தேதி காலை 6 மணியளவில் தமிழக, ஆந்திர எல்லையில் செல்லும் காட்சிகளும் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. இதை அடிப்படையாக வைத்து போலீஸார் தொடர்ந்துதுப்புதுலக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்