சென்னை | ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஹிஜாவுநிறுவன நிர்வாகிகளில் ஒருவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதலி தெருவைச் சேர்ந்தவர் நேரு (47). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செயல்பட்ட ஹிஜாவு நிறுவனத்தில் முகவராகஇருந்தார். இவரை நம்பி பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

நேருவும் நிறைய பேரைஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தார். ஆனால் அறிவித்தபடிஅந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பி வழங்கவில்லை.

இதில் பணத்தை இழந்த சுமார் 10 ஆயிரம் பேர், தங்களிடம் ரூ.800கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், முகவர்கள் என 6 பேரைஅடுத்தடுத்து கைது செய்தனர். அந்நிறுவன தலைவர் சவுந்திரராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் நேருவும் கடந்தநவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால்வழக்கு காரணமாக நேருவின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன வேதனை மற்றும் விரக்தியுடன் காணப்பட்ட நேரு, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு சென்று வந்தார். இதன் பின்னர் வீட்டுக்கு வந்த அவர், தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நேரு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்