புதுச்சேரி அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளர் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பூக்கடை நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக முன்னாள் மாநில செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நடராஜன். இவர் இன்று மாலை திடீரென தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

அதிமுகவில் மாநில செயலராக இருந்த இவர் தேர்தலில் போட்டியிட்டு கடந்த 1991-96 மற்றும் கடந்த 1996-2001 ஆகிய இருமுறை எம்எல்ஏவாக வென்றார். அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவராகவும் இருந்தார். பின்னர் திமுகவுக்கு சென்று, கடந்த 2006-11ல் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சென்று தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அதிமுகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். தற்போதுவரை அதிமுகவில் இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்