சென்னை | திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் உடல் நலக்குறைவால் மரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். இவர், அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த எஸ். நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உட்பட பலரை கைது செய்தனர். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை, இச் சம்பவம் தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்புதீன் (62), சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 15-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்