சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி: முன்னாள் நீதிமன்ற அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 20,000 ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் நீதிமன்ற அலுவலருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவலராக பணிபுரிந்தவர் மோகன கிருஷ்ணன். இவருக்கு எதிராக பெரம்பூரை சேர்ந்த குமார் என்பவர் சென்னை லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். அதில், "சென்னை உயர் நீதிமன்றத்தில் தூய்மைப் பணியாளருக்கான வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2002-ம் ஆண்டு 20,000 ரூபாய் பணம் பெற்றார். ஆனால், அவர் உறுதியளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. எனவே, அவர்மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் அடிப்படையில் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை மோகன கிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், "இவர் மீதான குற்றச்சாட்டுக்கள், சரியான முறையில் நிரூபிக்கப்படாததால், இந்த வழக்கில் இருந்து முன்னாள் நீதிமன்ற அலுவலர் மோகன கிருஷ்ணனை விடுவித்து" கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "சாட்சிகள் மற்றும் ஆவணங்களை சரிவர ஆராயாமல் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் நீதிமன்ற அலுவலர் 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை சரிவர விசாரண நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மேல்முறையீடு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன், "குற்றம் சாட்டப்பட்ட மோகனகிருஷ்ணன் மீது ஏற்கெனவே இதேபோல, இரண்டு நபர்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலே கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் நிருப்பிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் மோகன் கிருஷ்ணனை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளது" என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நீதிமன்ற அலுவலர் மோகனகிருஷ்ணனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்