அசாம் அதிர்ச்சி: கணவர், மாமியாரை கொலை செய்து ஃப்ரிட்ஜில் உடல் பாகங்களை மறைத்து வைத்த பெண் கைது

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்து, அவர்களது உடல் பாகங்களை துண்டுத் துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் வந்தனா என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான கவுகாத்திக்கு அருகே அமைந்துள்ள நோன்மத்தி எனும் இடத்தில் நடந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேவை கொலை செய்த அந்தப் பெண் மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களது உடலின் பாகங்களை கவுகாத்தியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு அவரது காதலர் உதவியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு அவர்களது உடல்களை வீசியுள்ளனர். இந்தக் கொலைக்கு காரணம், வந்தனாவுக்கு வேறு ஒரு ஆணுடன் ஏற்பட்ட காதல்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களது உடலை போலீசார் அடையாளம் காண வழிகாட்டியுள்ளார் வந்தனா. கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்த பின்னர் அவர்களது உடலின் பாகங்களை துண்டுத் துண்டாக அவர் வெட்டி, குளிர்சாதன பெட்டியில் வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்திய தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் இதேபோல கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார். டெல்லியில் உள்ள காட்டுப் பகுதியில் அவர் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பெண்ணை, அவரது காதலனுடன் கைது போலீசார் செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக தகவல். இந்தக் கொலை சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்