குண்டலபுலியூர் ஆசிரமத்தை சீல் வைக்க உத்தரவு: பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் முறைகேடு நடந்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ஆசிரமத்தை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரம நிர்வாகி, தன் மனைவியோடு மருத்துவமனையில் தங்களை குரங்கு கடித்ததாக கூறி சேர்ந்துள்ளார். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சலீம்கான், அமெரிக்காவில் தொழில் புரிந்து வருகிறார். வயதான இவரது மாமா ஜபருல்லாவை, நண்பர் உதவியோடு, விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில், 2021 டிசம்பர் 4-ம் தேதி சேர்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்டில் ஊருக்கு வந்த சலீம்கான், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமா ஜபருல்லாவைப் பார்க்க சென்றார். அவர் அங்கு இல்லை. ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபினிடம் கேட்டபோது, பெங்களூருவில் உள்ள ஓர் ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது, அங்கும் அவர் இல்லை.

இதையடுத்து சலீம்கான் சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து கடந்த 10-ம் தேதி குண்டலபுலியூர் கிராமத்தில் உள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆசிரமத்தில் இருக்க வேண்டிய 16 பேர் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த ஆதவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 142 பேர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை, விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். எஸ்பி ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “குண்டலபுலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண் குழந்தை உட்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 142 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 86 பேர் நலமுடன் இருக்கிறார்கள்.

அவர்களின் வீடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த ஆசிரமத்தை உரிய அனுமதி யின்றி நடத்தியது உறுதியாகியுள்ளது. அங்கு தங்கியிருந்தவர்கள் சித்திரவதைக்கும், பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளாகியுள்ளனர் என் பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி நடந்த ஆசிரமத்தை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித் தார். இவ்வழக்கு தொடர்பாக எஸ்பி நாதா கூறுகையில்,“பாலியல் வன்கொடுமை, அடைத்து வைத்துசித்திரவதை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காதது உள்ளிட்ட 13 பிரிவுகளில் 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஊழியர் கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் ஆகியோர் குரங்கு கடித்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் அவர்கள் கைது செய்யப்படுவர். தொடர்ந்து இக்காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

வழக்குகள் விசாரணை வெளிப்படை தன்மையாக நடைபெறும். இங்கு யாரும் மாயமாக வில்லை. ஆசிரமத்தில் குறப்பிட்டுள்ள பதிவேட் டின் படி அனைவரும் உள்ளனர். இங்கிருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டவர் அங்கு காணாமல் சென்றுள்ளார். இதுகுறித்து அம்மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆட்கொணர்வு மனு மீது பெங்களூரு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

45 mins ago

க்ரைம்

51 mins ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்