காஞ்சிபுரம் | மகன் தங்களை கவனிக்காததால் விபரீத முடிவு: வயதான தம்பதியர் தற்கொலை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: வயதான தங்களை மகன் சரி யாக கவனிக்கவில்லை என்ற வருத்தத்தில் மணிமங்கலம் அருகே வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை யைச் சேர்ந்த தம்பதிகள் சுப்புராம் (87), காமாட்சி (84). இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர். மகன் மதுப்பழக்கத் துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவர் பெற்றோருடன் அடிக்கடி தகராறுசெய்து அவர்களை கவனிக் காமல் இருந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து தம்பதியர் இருவரும் மாடம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக தங்கி இருந்தனர். இந்த நிலையில் மகளும் மருமகனும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். பெற்றோர் அறையில் தூங்குவதாக நினைத்துவீட்டு மகள் வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்துஅக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். உள்ளே தம்பதியர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மணி மங்கலம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வயதானதம்பதி இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் மகன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி சரியாக அவர்களை கவனிக்காததாலும் இந்த முடிவை தம்பதியர் எடுத்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்