திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ளது ஆவட்டி கூட்டுரோடு. இன்று காலை மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கார் ஆவட்டி கூட்டுரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நசுங்கி காரில் பயணம் செய்த மதிவாணன், கவுசல்யா, தவமணி இரண்டு வயது குழந்தை சாரா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த துரைராஜ் என்ற முதியவர் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்து ராமநத்தம் போலீஸார் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்ட உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் துரைராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago