கோவை தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை குமுதம் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் அருகேயுள்ள குமுதம் நகரில் வசிப்பவர் மாயகண்ணன்(57). தொழிலதிபர். இவரது மனைவி செல்வ நாயகி (53). இருவரும் கடந்த 3-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தொண்டாமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். 10-ம் தேதி அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் போனில் அழைத்து வீட்டின் ஜன்னல், கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக மாயகண்ணன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது முதல்தளத்தில் உள்ள முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்