சென்னை | தலைமறைவாக இருந்த சட்டப் பல்கலைக்கழக ஊழியர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்ததாக சட்டப் பல்கலைக்கழக நூலகஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு நூலக ஊழியராக திருச்சியைச் சேர்ந்த மணியரசு (29) என்பவர் பணி செய்துவந்தார். இவர் மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அண்மையில் புகார் தெரிவித்தார்.

அதில், ``மணியரசு என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிஅவருடன் நெருங்கிப் பழகினேன். இதனால், 2 முறை கர்ப்பம் தரித்தேன். தற்போது என்னைத்திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணத்துக்கான ஏற்பாடு நடக்கிறது. எனவே, என்னை ஏமாற்றிய மணியரசு மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தனர். புகார் உண்மை எனஉறுதியான நிலையில் மணியரசு மீது பாலியல் பலாத்காரம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மணியரசு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்