கோவை | 7 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர், கடந்த 2012-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற நாசர்(29) என்பவரை கைது செய்தனர்.

பின்னர், பிணையில் வெளிவந்தநாசர், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 7 வருடங்களாக தலைமறைவாக இருந்ததையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, எஸ்.பி பாலாஜி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன், காவல்ஆய்வாளர் மேனகா, உதவிஆய்வாளர் அர்ஜூன் ஆகியோர்அடங்கிய கோவை மாவட்டகுடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் நாசரை தேடிவந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நாசரை கைது செய்து, நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்