சென்னை: பிரிட்டன் விசாவை போலியாக தயாரித்து கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி அழகிரி நகரை சேர்ந்தவர் முகமது லியாஸ் (43). வடபழனி பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, நண்பர்கள் மூலம் அறிமுகமான திருவாரூர் மாவட்டத்தில் டிராவல்ஸ் ஏஜென்ஸிநடத்தி வரும் முகமது தாரிக், அவரது கூட்டாளிகளிடம், தனது வாடிக்கையாளர்கள் 20 பேருக்கு பிரிட்டன் விசா கேட்டு முன்பணம் கொடுத்துள்ளார்.
பல தவணைகளாக வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.45 லட்சத்தை முகமது தாரிக்குக்கு அனுப்பிஉள்ளார். பணத்தை பெற்ற முகமது தாரிக், 4 பேருக்கு பிரிட்டன் விசா கிடைத்துள்ளதாக கூறி முகமது லியாஸிடம் கொடுத்துள்ளார். விசாக்களை பெற்ற முகமது லியாஸ், அவற்றை சரிபார்த்த போது, போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் லியாஸ் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், போலிவிசா தயாரித்து கொடுத்த முகமது தாரிக்கின் கூட்டாளியான அதிராமபட்டினத்தை சேர்ந்த கமால் நசீர்(45)என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளமுக்கிய குற்றவாளியான முகமது தாரிக் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
» ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டி - அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago