சென்னை: மது போதையில் தகராறு செய்த மகனை தட்டிக் கேட்ட தாயை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாசர்பாடி சாந்தி நகர், 11-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணகி(40). இவரதுமகன் அஜய்(21). பெயின்டர் வேலை செய்துவருகிறார். இவர் மகா சிவராத்திரிக்காக மாலையணிந்துள்ளார். அஜய் நேற்று முன்தினம் அதிகாலை மது போதையில் வீட்டில்சத்தம் போட்டுக் கொண்டே நடனமாடியுள்ளார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் கண்ணகியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கண்ணகி, மகன் அஜய்யிடம் ஏன் சத்தம் போடுகிறாய்? மாலை அணிந்து கொண்டு மது அருந்தலாமா? எனகண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அஜய், பீர் பாட்டிலால் கண்ணகியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், கண்ணகி பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டுஅங்குவந்த அக்கம்பக்கத்தினர், கண்ணகியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுஉயிரிழந்தார்.
இதுகுறித்து எம்கேபி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தாயை கொலை செய்ததாக அஜய்யை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago