கடலூர்: கடலூரில் குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மஞ்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் - செல்வி தம்பதியின் இளைய மகள் தனலட்சுமி (27). கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மஸிஸ்டாக இருந்தபோது சிதம்பரம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சற்குரு (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு லக் ஷன் என்ற 6 மாத ஆண்குழந்தை இருந்தது. சற்குரு, தனலட்சுமி இருவரும் தேவனாம்பட்டினத்தில் வசித்து வந்தனர். இதற்கிடையில் சற்குருவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர், தனலட்சுமியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் தனலட்சுமி, நீதிமன்றத்தில் கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினார். இதனால் அவர் மீது கோபத்தில் இருந்தார் சற்குரு. தாய் வீட்டில் இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் குழந்தை லக்ஷனை தூக்கிக் கொண்டு தாயார் செல்வியுடன், செல்லங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி தமிழரசி வீட்டிற்கு சென்றார்.
அப்போது தமிழரசியின் கணவர் பிரகாஷ் வேலைக்காக வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில் சகோதரி வீட்டில் இருந்த தனலட்சுமியிடம் சற்குரு போனில் தகராறு செய்து, பெட்ரோல் கேனுடன் அங்கு வந்தார். பின்னர் அங்கிருந்த தனலட்சுமி, அவரது தயார் செல்வி, சகோதரி தமிழரசி ஆகியோரிடமும் தகராறு செய்தார்.
» போச்சம்பள்ளி அருகே சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது
» சென்னை | போதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தாயை அடித்து கொன்ற மகன் கைது
தொடர்ந்து ஆவேசமடைந்த சற்குரு, அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கடலூர் முதுநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சற்குரு, தனலட்சுமி, செல்வி ஆகியோரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழரசி, அவரது 4 மாத குழந்தை ஹாசினிமற்றும் தனலட்சுமியின் 6 மாதஆண் குழந்தை லக் ஷன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவ மனையில் சற்குரு உயிரிழந்தார். அவரைதொடர்ந்து நள்ளிரவில் தனலட்சுமி உயிரிழந்தார். இறந்தவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனலட்மியின் தாயார் செல்வி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சற்குரு, தன லட்சுமியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago