சென்னை: தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை கிடங்கில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகள் திருடப்பட்டுள்ளது குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. அதே பகுதியில்அந்த கடைக்கான கிடங்கும் உள்ளது. இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான 26 பட்டுப் புடவை பண்டல்கள் திருடு போயின.
இதுகுறித்து ஜவுளிக்கடை நிர்வாகம் சார்பில் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கிடங்கில் காவலாளியாக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம் (35) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே கைவரிசை காட்டி தலைமறைவாகிவிட்ட ராம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago