நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு மூதாட்டியை கொன்றதாக காவலர் கைது: சுங்குவார்சத்திரம் போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: சுங்குவார் சத்திரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை போலீஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் யசாதோ (70). இவர் மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். யசோதா மட்டும் மேலேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திவேல். இவர் திருவாரூர் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக உள்ளார். இவர் யசோதாவுக்கு உறவினர். கடந்த சனிக்கிழமை யாசோதா தலை நசுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சுங்குவார் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சதீஷ் இந்தக் கொலையை செய்ததும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது. மேலும் சதீஷ் கொலை செய்துவிட்டு யசோதா வைத்திருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளார்.

இவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது அவர் பெண்களுடன் ஆபசமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சிக்கியுள்ளன. இந்தப் பணத்தை அவர்களுக்கு செல்வு செய்துள்ளாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்