விருதுநகர்: விருதுநகரில் பணியாற்றிவந்த ஆயுதப்படைக் காவலரை ஒரு மாதமாகக் காணவில்லையென அவரது காதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் விவேக் (30). விருதுநகர் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கற்குவேலாயி (29). விருதுநகர் ஆத்துமேட்டைச் சேர்ந்த இவர் நர்சிங் படித்தவர். இருவரும் காதலித்து 10.6.2020-ல் இரு வீட்டாரின் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இவர்களுக்கு நவிமீனா என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. சென்னையில் பணியாற்றி வந்த விவேக், 2002-ம் ஆண்டு விருதுநகருக்கு இட மாறுதாலாகி வந்தார். விவேக் சில பெண்களுடன் கற்குவேலாயிக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்துள்ளார். இதையறிந்த கற்குவேலாயி விவேக்கை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி காலை வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றவர் ஒரு மாதத்துக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் விசாரித்தும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்க வில்லை.
இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் கற்குவேலாயி நேற்று புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல்போன ஆயுதப்படைக் காவலர் விவேக்கை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago