ஶ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணேஷ்ராம்(27).
இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிந்துஜா(21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணேஷ்ராம் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சிந்துஜாவை கொடுமை செய்து வந்தனர். இதையடுத்து 1.6.2014 அன்று காலை சிந்துஜா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிந்துஜாவின் தந்தை அருணகிரிநாதன் தனது மகளை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜபாளையம் தெற்கு போலீஸில் கணேஷ்ராம் மற்றும் அவரது தாய், தந்தை, பாட்டி ஆகியோர் மீது புகார் அளித்தார்.
வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கணேஷ் ராமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அரசு வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகி வாதாடினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago