விழுப்புரம் | டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்தது உட்பட பல்வேறு வழக்கில் தொடர்பு: பெண் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு, இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று பூட்டியவீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும்பணத்தை திருடிச் செல்வதாக பல்வேறு புகார்கள் போலீஸா ருக்கு வந்த நிலையில் தனிப் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, திருக் கோவிலூர் டிஎஸ்பி பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் இன்ஸ் பெக்டர் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடபொன்பரப்பி அருகே புதூர் கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அதிவேக மாக வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர். அதில் வந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியுள் ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் சென்னை, பெரம்பூர், புதுகாலனியைச் சேர்ந்த கார்த்திக் (19), எருக்கஞ்சேரி பாலாஜி (23), நேரு நகரைச் சேர்ந்த சிந்து (23) என்பது தெரியவந்தது.

அவர்கள் தேவபாண்டலம் மற்றும் பகண்டை கூட்டு ரோட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, தியாகதுருகம், சங்கராபுரம், மூங் கில்துறைப்பட்டு, கீழ்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றதும், திருக்கோவிலூர் அருகே கனகந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றதும் தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் திருடிய நகைகள் மற்றும் பணத்தை வைத்து சங்கரா புரம் பகுதியில் வீட்டு மனை ஒன்றை வாங்கியதும் தெரிய வந்தது.

3 பேரிடம் இருந்து வீட்டு மனை, கார், இருசக்கர வாகனம் உட்பட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்