காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி(35). கர்ப்பிணியாக இருந்த துர்கா லட்சுமி பிரசவத்துக்காக நெடுங்காடு அருகே நல்லாத்தூர் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
அங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஜன.25-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 3 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினரை துர்கா லட்சுமி மண் வெட்டியால் தாக்கிவிட்டு, தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், 3 மாத குழந்தை, துர்கா லட்சுமியின் பாட்டி வேதவல்லி(85) ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த துர்கா லட்சுமி, அவரது பெற்றோர், சகோதரர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நெடுங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது துர்கா லட்சுமிக்கு சிகிச்சை முடிந்த நிலையில், போலீஸார் நேற்று அவரைக் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மன உளைச்சல் காரணமாக துர்கா லட்சுமி இவ்வாறு செய்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago