விருதுநகர் | பாலியல் வழக்கில் அதிமுக பெண் நிர்வாகி, கணவர் கைது

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகரில் பெண் ஒருவரை பாலியலில் ஈடுபடுத்தியதாக அதிமுக பெண் நிர்வாகி, அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் கருப்பசாமி நகர் ஐ.டி.பி.காலனியில் ஒரு வாடகை வீட்டில் பாலியல் சம்பவங்கள் நடப்பதாக பாண்டியன் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸார் குறிப்பிட்ட வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மேட்டமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியலில் ஈடுபடுத்தியதாக விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த அதிமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி அமல்ராணி (40), அவரது கணவர் சந்திரசேகரன்(42) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான கார் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்