சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள ரேசன் கடையில் சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் விற்பனையாளர் மும்தாஜ் பேகம் மற்றும் ஒட்டுநரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சிவகாசி முஸ்லிம் தைக்கா தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம்(40). இவர் பராசக்தி காலனியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை சரக்கு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகளை ஏற்றி கொண்டிருந்தனர். சரக்கு வாகனத்தை முற்றுகையிட்டு வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள் மற்றும் பொதுமக்கள் விற்பனையாளர் மும்தாஜ் பேகத்திடம் இதுகுறித்து கேட்டதற்கு, அவர் உரிய விளக்கம் அளிக்காததால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு கொண்டு செல்வதற்காக ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து விற்பனையாளர் மும்தாஜ் பேகம், சரக்கு வாகன உரிமையாளர் கார்த்தியை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் 40 மூடைகளில் இருந்த 2 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தய சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago