சென்னை | 10-வது மாடியிலிருந்து குதித்து நடன கலைஞர் தற்கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெரியமேடு அல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). ‘டிக் டாக்’ இருந்தபோது, தனது நடன வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பங்கேற்று நடன திறனை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணி அளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-வது மாடியிலிருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார், ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ரமேஷ் நடித்திருந்தார். ரஜினி நடித்துவரும் ‘ஜெயிலர்’ படத்திலும் அவர் நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்