வேலூர் பாலமதி மலையில் பெண் படுகொலை: போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் பாலமதி மலை பாறை இடுக்கில் பெண்ணை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்து உடலைவீசிச் சென்ற மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வரு கின்றனர்.

வேலூர் அடுத்த பாலமதி மலைப் பகுதியில் உள்ள பாறைஇடுக்கில் பெண் உடல் இருப் பதை அவ் வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர் நேற்று காலை பார்த் துள்ளனர். இதுகுறித்து, பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அந்த பெண் ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், இறந்த பெண்ணுக்கு சுமார் 27 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். சுடிதார், லெக்கின்ஸ் அணிந்துள்ளார். குளிருக்கு பாதுகாப்பாக இருக்க ஸ்வெட்டர் அணிந்துள்ளார். கழுத்தில் தாலி, காலில் மெட்டி அணிந்துள்ளார். கொலை செய்த பிறகு அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியிலேயே அவரை கொலை செய்து உடலை வீசிச் சென்றதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இறந்த பெண்ணின்உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையானவர் யார்? என தெரியாத நிலையில் கொலை யாளி யார்? என்பதை கண்டறிய பாலமதி மலை அடிவார பகுதியில்இருக்கும் கண்காணிப்பு கேமராக் களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொலையான பெண்ணின் படத்துடன் வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரு டன் கொலையான பெண்ணின் உடலமைப்பு ஒத்துப்போவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அடையாளம் காண நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பிறகே பெண் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித் தனர். இந்த வழக்கு தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்