வேலூர் | உணவு விநியோக ஊழியரை தாக்கியவர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலைவாசன் (22 ). இவர், வேலூர் மாநகர பகுதியில் சொமட்டோ நிறுவனத்தில் உணவு பார்சல் விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார்.

இவர், காட்பாடி அருகேயுள்ள உணவகத்தில் இருந்து பார்சல் உணவுடன் விநியோகம் செய்வதற்காக வெள்ளக்கல்மேடு-காங்கேயநல்லூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனம் ஒன்றுடன் திருமலைவாசன் சென்ற வாகனம் மோதியது.

இதில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாய்தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது, திருமலைவாசனை மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சரமாரியாக தாக்கினர்.

இதனால், திருமலைவாசன் மயங்கி விழுந்தார். அப்போதும், அவரை விடாமல் தாக்கிவிட்டுச் சென்றனர். அவ் வழியாகச் சென்ற சிலர் மயங்கிய நிலையில் இருந்த திருமலைவாசனை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் திருமலைவாசன் சிகிச்சை பெற்று வருவதால் காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெள்ளக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (33) என்பவரை கைது செய்தனர். மேலும், அவருடன் வந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்