ராணிப்பேட்டை | கணவரை வெந்நீர் ஊற்றி கொலை செய்த வழக்கில் மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த வழக்கில் மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த இடையந் தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (44), கூலித்தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (40). இவர் களுக்கு ஒரு மகன் உள்ளார். இந் நிலையில், முருகனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பது வழக்கம்.

கடந்த 23-12-2017-ல் தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காமாட்சி வெந்நீரை எடுத்து முருகன் மீது ஊற்றியுள்ளார். சூடு தாங்காமல் அலறிய அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து வாலாஜா காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து காமாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணை நீதிபதி ஜான் சுந்தரலால் சுரேஷ் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, காமாட்சிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறையினர் காமாட்சியை அழைத்துச் சென்று வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்