திருச்சி: திருச்சி கோட்டை கீழ ஆண்டார் வீதி பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(27). பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளராக இருந்த இவருக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அந்த மாணவியை வினோத் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் பரிந்துரைத்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில், வினோத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago