அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் காணாமல் போன சிறுமி போலீஸாரால் சிறிது நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங் கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது 13 வயது மகள், நேற்று காலை பள்ளி செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸில் சரவணன் புகார் அளித்தார்.
சிறுமியின் புகைப்படத்தை வைத்து போலீஸார் பல இடங்களிலும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் வாகனச் சோதனையும் நடந்தது. சிறுமியின் புகைப்படத்துடன் போலீஸார் பல இடங்களிலும் விசாரணை நடத்தினர். மேலும், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறுமியை போலீஸார் சிறிது நேரத்தில் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.
பின்னர் பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். விசாரணையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் தன்னை சிலர் கடத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதன் பேரில் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago