சென்னை: சென்னை, புளியந்தோப்பு, போலு நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சாந்தா(68). தனியாக வசித்து வருகிறார்.
இவர்கடந்த மாதம் 19-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில்வைத்திருந்த 22 பவுன் நகைகள் மற்றும்பணம் ரூ.1.55 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. சாந்தா இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாகச் சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். அதன் மூலம் சாந்தா வீட்டில் திருடியது புளியந்தோப்பு, அம்மையம்மாள் தெருவைச் சேர்ந்த கோவிந்த்(38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 22 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.1.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ``கைது செய்யப்பட்ட கோவிந்த், சாந்தா வீட்டில் ஏற்கெனவே வாடகைக்குக் குடியிருந்துள்ளார். அந்த பழக்கத்தில் கோவிந்த்அடிக்கடி சாந்தாவின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு கோவிந்த், சாந்தா வீட்டில் இல்லாததைத் தெரிந்து கொண்டு திருடியுள்ளார். இவர்மீது ஏற்கெனவே யானைக்கவுனியில் வெள்ளிக் கொலுசு கடையில் திருடிய வழக்கு உள்ளது'' என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago