கிளியனூர் அருகே சாலை விபத்தில் முதியவர், குழந்தை உயிரிழப்பு: 8 பேருக்கு தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கிளியனூர் அருகே சாலை விபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய வரும், ஒன்றரை வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுரேஷ் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு வேன் மூலம் சென்றனர்.

அந்த வேன் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் புறவழிச்சாலையில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த கிளியனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விக்டர் சுரேஷ் மற்றும் அவரது உறவி னரின் ஒன்றரை வயது பெண் குழந்தை வினாளி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த விக்டர் சுரேஷின் மனைவி தமிழரசி உள்ளிட்ட 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இது குறித்து கிளியனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

31 mins ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்